கொல்லிமலையில் பார்க்க வேண்டிய இடங்கள்

கொல்லிமலை

அந்த காலம் முதல் இன்றைய திரைப்பட பாடல் வரை கொல்லைமலையை பற்றி புகழாத அல்லது இம்மலையை பற்றி கூறாத புழவர்களே இல்லை எனலாம்.

     வேட்டைகாரன் மலை, மூலிகைகளின் இராணி மூலிகை மலை, கொல்லும் மலை  கொல்லி மலை என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கி.பி.200இல் இக்கொல்லிமலையை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்டு வந்தார்.

      உயிர்களை கொல்லும்அடத்தியான அரிய மூலிகைகள் இங்கு உள்ளதால் கொல்லிமலை என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும்
     சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்பு  ‘கொல்லிப்பாவை’ என்ற தெய்வம் வாழ்ந்து வந்ததாகவும், கொல்லிபாவையே அக்கால திராவிடர்களின் காவல் தெய்வமாக இருந்து மக்களை காப்பாற்றியதாக கொல்லிமலை சித்தர்களின்  சங்ககால ஓலை சுவடிகள் மூலம் தெரியவருகிறது.அவள் மூலமாக கொல்லிமலை என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது
        கொல்லிமலை நாமக்கல் மாவட்டத்தின் கொல்லிமலை தாழுக்காகவும் 200 சகிமீ மற்றும் அதிகபட்சமாக 4663(1400மீ) அடி உயரம் கொண்டதாகவும் உள்ளது.

கொல்லிமலை மற்றும் கொல்லிமலையை சுற்றியுள்ள சுற்றுலா தளங்கள்-best places in kollimalai

 1. ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி
 2. அறப்பளீஸ்வரர் திருக்கோவில்
 3. வாசலூர்பட்டி படகு இல்லம்
 4. முதுமக்கள் தாழி
 5. சீக்கு பாறை வியூ பாயிண்ட் 
 6. சேலூர் வியூ பாயிண்ட்
 7. சிறுமலை வியூ பாயிண்ட்
 8. பிண்ணம் வியூ பாயிண்ட்
 9. எட்டுக்கை காளியம்மன் கோவில் 
 10. மாசி பெரியசாமி கோவில்
 11. சித்தர் குகை
 12. மாசில்லா அருவி
 13. நம்ம அருவி
 14. விவசாய பண்ணை
 15. பழனியப்பர் முருகன் கோவில்
 16. மெட்டாலா ஆஞ்சனேயர் கோவில்
 17. பள்ளிப்பாறை
 18. புளியஞ்சோலை
 19. புளியஞ்சோலை பெரியண்ணசாமி கோவில்’
 20. புளியஞ்சோலை  மாரியம்மன் கோவில்

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி

   கொல்லிமலையில் பார்க்கவேன்டிய இடங்களில் முக்கியமான இடம் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி.   இது அறப்பளீஸ்வரர் கோயில் அருகிலேயே  உள்ளது. நான்கு பக்கமும் மலை  சூழ்ந்து மனதிற்க்கு மிகவும்  இதமான இடமாகும்

இங்கு குளித்தால் தீராத நோய்கள் தீரும், தீராத பாவங்கள் நம்மை விட்டு விலகும் என்று தீவிரமாக நம்பப்படுகிறது.

அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு அருகில் மீன்பள்ளித்துறை என்னும் இடத்தில் ஓடுகின்ற ஐயாறும் ,அதற்கு அருகில் ஓடுகின்ற சின்னாறு மற்றும்கல்லக்குழி ஆறு ஆகிய மூன்று ஆறும் இணைந்து ஆகாய கங்கை எனும் புனித அருவியாகக் கொட்டுகிறது.

நீர் வீழ்ச்சியாகச் செல்லும் மூன்று ஆறுகளோடு இன்னும் இரண்டு ஆறுகள் சேர்ந்துபஞ்சநதி எனும் பெயரில் புளியஞ்சோலை வழியாக செல்கிறது. அங்கிருந்து  சுவேத நதியாகி வெள்ளாறுடன் சேர்ந்து திட்டகுடி, புவனகிரி பரங்கிபேட்டை வழியாகச் காவிரியுடன் கலந்து வங்கக்கடலில் கலக்கிறது.

 • மொத்தம் 1015 படிகள் இறங்கி செல்ல வேண்டும்.
 • மொத்தம் இறங்க வேண்டிய உயரம் 600 அடி
 • 150 அடி உயர நீர்வீழ்ச்சி
 • வழிபாதை திறக்கும் நேரம் : 6.00am to 3.00 pm

அறப்பளீஸ்வரர் திருக்கோவில்

வாசலூர்பட்டி படகு இல்லம்

சீக்கு பாறை வியூ பாயிண்ட்

விவசாய பண்ணை

முதுமக்கள் தாழி

மாசில்லா அருவி

பழனியப்பர் கோவில்

மெட்டாலா ஆஞ்சனேயர் கோவில்

மாசி பெரியசாமி கோவில்

பள்ளிப்பாறை

எப்படி செல்வது?

வான்வழியாக

அருகில் உள்ள விமான நிலையம்

திருச்சி விமான நிலையம் – 132 கி.மீ

கோவை விமான நிலையம் -221 கி மீ

ரயில் நிலையம்

சேந்தமங்கலம்-34 கிமீ

நாமக்கல்-39 கி மீ

இராசிபுரம்-49 கி மீ

ரயில்வே சந்திப்பு

சேலம்- 83 கி மீ

ஈரோடு – 106 கி மீ

கரூர்- 97 கி மீ

திருச்சிராப்பள்ளி-132 கி மீ

சாலை மார்க்கமாக செல்ல

மலைப்பாதையின் தூரம்:

சேந்தமங்கலம் காரவள்ளி  சோழக்காடு வழியென்றால் காரவள்ளியில் இருந்து செம்மேடு வரை 26 கிமீ. தூரம் மலையேற்றப்பாதை. இதில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. திறமையான அனுபவம் நிறைந்த ஓட்டுனர்களே இந்த வழியாக செல்ல முடியும்.

செம்மேட்டில் இருந்து

 • சேந்தமங்கலம் – 34 கி மீ
 • இராசிபுரம் – 49 கி மீ
 • நாமக்கல் – 39 கி மீ
 • முள்ளுக்குறிச்சி – 36 கி மீ
 • தம்மம்பட்டி – 45 கி மீ
 • ஆத்தூர் – 73 கி மீ

தங்குமிடங்கள்

 • நல்லதம்பி ரிசார்ட்
 • பி ஏ ரிசார்ட்
 • சில்வர்லைன் ரிசார்ட்
 • YOUTH HOSTEL

அரபலீஸ்வரர் கோவில் அருகில்

போன் : 04286 -247425

 • அரசு குடில்

கொல்லிமலை பஞ்சாயத்து யூனியன், செம்மேடு

போன் : 04287-247487, 9444404220, 9626700897

best places in kollimalai

தங்கள் கருத்துகள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. படித்துவிட்டு கருத்து பதிவிட மறந்துவிடாதீர்கள்.

Leave a Reply

error: