குழந்தை வளர்ப்பு பொருட்கள்
புதியதாக பிறந்த குழந்தை ,பிறக்க போகும் குழந்தை தாய்மார்களுக்கு வேண்டிய குழந்தை வளர்ப்பு பொருட்கள்
புதியதாக தாயானவர்கள் எதை செய்ய வேண்டும் , எப்பொழுது செய்ய வேண்டும், அதை எப்படி முறையாக செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்ற குழப்பங்கள் வருவதை தவிர்க்க சில குறிப்புகள் , குழந்தை வளர்ப்பு பொருட்கள் லிஸ்ட்
துணி வகைகள்
பருத்தியால் ஆன துணி வகைகள் அதுவும் மிருதுவான துணிகள் வாங்குவது நல்லது.
குளிர்கால ஆடைகள் துணி வகைகள்
துண்டுகள்– குழந்தையை பிடிக்க மற்றும் தூக்கி செல்வதற்கும் பெரிய துண்ணுகளை வாங்கி வைத்திருக்கவும். குளித்த பிறகு துவட்டுவதற்கு ஏற்ற பூந்துண்டு ஒன்றையும் வைத்துகொள்வது நல்லது.
வசதியான படுக்கை
குழந்தகள் தூங்குவதற்கு ஏற்ற படுக்கை , தலையனை. அளவில் பெரியதாக இல்லாமலும் சிறியதாக இல்லாமலும் மீடியமான அளவில் படுக்கை வசதி அமைத்தால் அமைதியாக தூங்குவதற்கு ஏதுவாக இருக்கும்.அடர்த்தியான பருத்தி போர்வை வகைகளை பயன்படுத்துவது நல்லது. இலவம் பஞ்சால் ஆன தலையனை உபயோகபடுத்தலாம்.
கொசு பாதுகாப்பு
முக்கியாக குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் பார்த்து கொள்வது, டெங்கு மலேரியா போன்ற விபரீதமான பலவகையான நோய்கள் வராமல் தடுத்து குழந்தை ஆரோக்கியமாக இருக்க உதவும். இதற்காக கொசுவர்த்திசுருள் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். தரமான கொசுவலைகளை வாங்கி பயன்படுத்தலாம்.
டயப்பர்
குழந்தகளின் சருமம் மிகவும் மிருதுவானது.குழந்தைகளுக்கு ஏற்ற மிருதுவான டயப்பர்களையே உபயோகபடுத்த வேண்டும்.
ஊஞ்சல்
குழந்தகள் நிம்மதியான உறக்கம் வர ஊஞ்சல் வாங்கி பயன்படுத்தலாம்
கை கால் உறைகள்
குழந்தைக்கு எப்போதும் கதகதப்பான வெப்ப நிலையே தேவைப்படுகிரறது. தாய் 24 மணி நேரமும் அரவணைத்து கொண்டே இருக்க முடியாது. இதற்கு கை கால் உறை அணிந்த விடுவதால் குழந்தை எப்பொழுதும் நிம்மதியாகவும் அமைதியாகவு இருக்கும்.
கவனத்தை ஈர்க்கும் பொம்மைகள்
கிலுகிலுப்பை போன்ற ஓசை எழுப்பகூடிய பொம்மைகள் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. எச்சரிக்கை காயம் ஏற்படுத்தும் அல்லது சாயம் ஒட்டும மலிவான பொம்மைகளை வாங்கி கொடுக்க கூடாது.
சங்கு
குழந்தகளுக்கு பால்கொடுக்க மருந்து கொடுக்க உதவும் சங்கு போன்ரவைகளை வைத்துகொள்வது நலம் வெள்ளி, பித்தளை, வெண்கலம் உலோகங்களில் கிடைக்கிறது.
குளியல் பொடி
சாம்பு சோப்பு போன்ற இரசாயனம் கலந்த பொருட்களை தவிர்த்து பாரம்பரியமான குளியல் பொடியும் தலைக்கு தேய்க்கும் பொடியும் சிறந்தது. இதை பெரியவர்களிடம் எப்படி செய்வது என்று அறிந்து கொண்டு வீட்டிலேயே செய்யலாம். நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
தலைக்கு எண்ணெய்
சுத்தமான இராசாயனம் கலக்காத தேங்காய் பயன்படுத்துவது நல்லது. செக்கில் ஆட்டிய எண்ணய் நல்லது. இரசாயனம் கலந்த வாசனை திரவியங்கள் தவிர்ப்பது நல்லது. விளக்கெண்ணை வைத்துக் கொள்வது சமயத்தில் நல்லது.
அமைதியான இசை
சில சமங்களில் குழந்தையை தூங்க வைக்க, அழுகையை நிறுத்த மெண்மையான இசை உபயோகமாக இருக்கும். இசைக்கு மயங்காதவர்கள் உண்டோ.
பேபி தெர்மோ மீட்டர்
பேபிதெர்மோ மீட்டர் வைத்து கொண்டால் உடல் சூட்டை கணிப்பதற்கு உதவியாக இருக்கும்.
நகவெட்டி
சில தாய்மார்கள் குழந்தை நகங்களை வெட்ட தங்கள் வாயிலேயே கடித்து துப்புவார்கள். இது தவறு. சரியான நகவெட்டியை பயன்படுத்துவது நல்லது.
குழந்தை வளர்ப்புக்கான பொருட்கள் ஆன்லைனில் தற்போது மிகவும் குறைந்த தள்ளுபடியுடன் கூடிய விலையில் கிடைக்கிறது
அமேசான் கிரேட் இந்தியன் தள்ளுபடி சேல் குழந்தைகளுக்கான ஆபர்கள்
பிளிப்கார்ட் பிக்பில்லியன் சேல் குழந்தகளுக்கான ஆபர்கள் 80% வரை தள்ளுபடி
இந்த பதிவு தங்களுக்கு பிடித்து இருந்தால் கமெண்ட் மற்றும் ஷேர் செய்யலாமே.