ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து மற்ற நெட்வொர்க்குகளுக்கு ஏர்செல் போர்ட் செய்வது எப்படி?
AIRCEL
∇ ∇ ∇
idea JIO bsnl airtel VODAFONE
போர்ட் செய்யும் வழிமுறைகள்
முதலில் வழக்கமாக ஏர்செல் போர்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
உங்கள் மொபைல் மெசேஜ் பாக்சை ஓப்பன் செய்யவும்.
புதிய மெசேஜ் ஓப்பன் செய்யவும்.
மெசேஜ் டைப் செய்யவேண்டிய இடத்தில் ‘ PORT ‘ என டைப்செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு ‘ 10 இலக்க மொபைல் நெம்பர்’ டைப் செய்யவும்.
பின் மெசேஜ் அனுப்பவேண்டிய இடத்தில் ‘ 1900 ” என டைப் செய்து அனுப்புதல் பட்டனை அழுத்தவும்.
ஃபார்மேட் :
Type : ” PORT<Spacs><10 Digit mobile number> “ and Send ” 1900 “
போர்ட் நெம்பரை பெறுதல்
மெசேஜ் அனுப்பியவுடன் உங்கள் மொபைலுக்கு ஒரு கன்பார்ம் மெசேஜ் வரும். பின்பு (UPC Number ) யூனிக் போர்ட் கோடு நெம்பர் உங்கள் மொபைலுக்கு வரும். இந்த நெம்பரானது சில சமயம் உடனடியாக வரும். ஆனால் தற்பொழுது 2 மணி நேரமோ அல்லது 2 நாட்களோ ஆகிறது.
உங்கள் மொபைல் நெம்பருக்கு யூனிக் கோடு வரவில்லையெனில், ஆதார் மற்றும் ஏர்செல் சிம்முடன் அருகில் உள்ள ஏர்செல் அல்லது பதிவு செய்த சிம் விற்பனையாளர் அலுவலகத்தை அனுகவும். அவர்கள் உடனடியாக யூனிக் போர்ட் கோடு பெற்றுத் தருவார்கள். மேலும் அங்கேயே உங்கள் பழைய நெம்பரிலேயே புதிய சிம் பெற்று வரலாம்.
புதிய நெட்வொர்க் சிம் மாற்றம்
யூனிக் போர்ட் கோடு அனது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். எனவே உங்கள் ஏர்செல்லை போர்ட் செய்து யூனிக் போர்ட் கோடு கிடைத்தவுடன் 15 நாட்களுக்குள் மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாறிவிட வேண்டும்.
யூனிக் போர்ட் நெம் கிடைத்தவுடன் தாங்கள் விரும்பும் ஜியோ, ஏர்டெல், வொடாஃபோன், பி எஸ் என் எல் போன்ற நெட்வொர்க்குகளுக்கு மாறிக்கொள்ளலாம்.
ஏர்செல் சிம் போர்ட் செய்தாலும் பழைய ஏர்செல் சிம்மையே உங்கள் மொபைலில் பயன்படுத்தலாம். 1-7 நாட்களில் உங்கள் சிம் ஆக்டிவேட் செய்யப்படும். ஆக்டிவேட் ஆனதும் ஏர்செல் சிம் சிக்னல் தெரியாது . ஏர்செல் சிக்னல் நின்றவுடன் உங்கள் புதிய நெட்வொர்க் சிம்மை மோபைலில் போட்டு மொபைல் வெரிஃபிகேசன் செய்தவுடன் புதிய சிம் பயன்பாட்டிற்கு வந்துவிடுகிறது.
முதல் அழைப்பை செய்தவுடன் தானாகவே கஷ்டமர் கேர் நெம்பருக்கு டைவர்ட் ஆகி உங்கள் விவரங்களை கேட்பார்கள். தேவையான விவரங்களை அளித்தவுடன் உங்கள் சிம் செயல்பட துவங்கும்.
பிரீபெய்டு சிம் எனில் உங்கள் பேலன்ஸ் குறைந்தது 19 ரூபாய் இருத்தல் வேண்டும். போஸ்ட் பெய்டு எனில் உங்கள் பில்லினை முழுவதுமாக கட்டிவிட்டிருக்க வேண்டும்.